2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இரட்டை நகர் பரஸ்பர பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


அஸ்லம் எஸ்.மௌலானா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அவுஸ்திரேலிய வர்ணம்பூல் நகருடன் கல்முனை நகர் இணைந்து, இரட்டை நகர் பரஸ்பர  பரிமாற்ற அபிவிருத்திக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக, கல்முனை மாநகர மேயரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம். றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகரை, தனது சகோதர நகராக இணைத்து, அபிவிருத்தி செய்வதற்கு அவுஸ்திரேலியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றான வர்ணம்பூல் மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்சமயம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள கல்முனை மாநகர மேயர் றகீப், வர்ணம்பூல் மாநகர மேயர் டொனி ஹெர்பட் உடன் வர்ணம்பூல் மாநகராட்சி மன்றச் செயலகத்தில், நேற்று (27)  உத்தியோகபூர்வமாகச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு மேயர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபைக் குழுத்தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கல்முனை மாநகர சபை திண்மக்கழிவகற்றல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் எதிர்நோக்கி வருகின்ற சவால்கள், தேவைகள் குறித்து கல்முனை மேயர் றகீப், வர்ணம்பூல் முதல்வருக்கு விரிவாக எடுத்துக் கூறியிருந்தார்.

இதனையடுத்து, கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கும் சுனாமியால் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு, தேக்கமடைந்த நிலையில், மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக காணப்படுகின்ற கட்டட இடிபாடுகளையும் இன்னபிற கழிவுகளையும் அகற்றுவதற்கும் கல்முனையை பசுமை நகராக மாற்றுவதற்கும் உதவுவதாக வர்ணம்பூல் மாநகர மேயர் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .