Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, ஏ.எல்.நிப்றாஸ்
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரியான எம்.ஐ.அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாக சேவையில் சுமார் 32 வருடகால அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட அதிகாரியான இவர், ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டக் காணி அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் சம்மாந்துறை, கல்முனை பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதனையடுத்து, தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே அமீர், மேற்படி இராஜாங்க அமைச்சின் செயலாளராகப் பதவியுயர்வு பெற்றிருக்கின்றார்.
சம்மாந்துறையைச் சேர்ந்த இவர், ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago