2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 23 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கை இராணுவத்தின் தொழில் துறைப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை, அம்பாறை - கல்முனை மாநகர சபை வளாகத்தில் இன்று (23) நடைபெற்றது.

கல்முனைப் பிராந்திய இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ரஞ்சன தேசப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்த நேர்முகப் பரீட்சையில் அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக் கடமை வீரர், சாரதி, நிர்வாக உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர், கணினி தரவுப் பதிவாளர், நிர்மாண மேற்பார்வையாளர், தச்சு உதவியாளர், அலுமினிய சேவையாளர், நீர்க் குழாய் பொருத்துநர், கம்பி வளைப்பவர், மின்னியளாளர், உலோக சேவையாளர், தீ அணைப்பாளர், வாகனங்கள் திருத்துநர், தையல் வேலையாளர் போன்ற 77 வகையான தொழில் துறைப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

சுமார் 35,000 இராணுவ வீரர்களை சேர்த்து கொள்ளுவதற்காக நாடு பூராகவும் நேர்முகப் பரீட்சை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .