2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இரு சமூகத்தவர்களுக்கான காணிகள் பகிர்ந்தளிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

கடந்த சில வருடங்களாக இரு சமூகங்களைச் சேர்ந்த தரப்பினர் மத்தியில் இழுபறி நிலையில் இருந்து வந்த ஒரு தொகைக் காணிகளை, சுமூகமான முறையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாங்காமம், நாவலடி பிரதேச விவசாயக் காணிகளே, இவ்வாறு இரு சமூகத்தவர்களுக்காக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

சுமார் 42 ஏக்கர் காணிகளை உரிய தரப்பினருக்கு வழங்கி வைக்கும் வேலைத்திட்டம்,  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைவாக, காணி உரிமைப் பத்திரம் கொண்டுள்ள 21 பேருக்கு தலா இரண்டு ஏக்கர் காணிகள் வழங்கும் வகையில், முதற்கட்ட நடவடிக்கை இன்று (15) நடைபெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை, தமண பிரதேச செயலாளர் உதார நாணயக்கார, இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் நஹிஜா முஸப்பிர், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட நில அளவை உத்தியோகத்தர் எம்.ரி.எம்.றபீக் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் கலந்துகொண்டு, இரு சமூகத்தவர்களையும் ஒன்றிணைத்து, காணிகளை எல்லைப் படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .