Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்மொழி பேசும் 04 உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்களுக்கான இரு நாள் பயிற்சி நெறி, பொத்துவில் அறுகம்பை தனியார் விடுதியில் இன்று (02) ஆரம்பமானது.
சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நியதியத்தின் அனுசரணையுடன், தேசிய மீனவ இயக்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இப்பயிற்சிநெறியில் பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய மீனவ இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில், வளவாளர்களாக பி.எம்.சேனாரத்ன, கே.நவரத்தின பண்டார, கள உத்தியோகத்தர் கே.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உள்ளுராட்சி மன்றங்களின் பிரதான குறிக்கோள்கள், தவிசாளர் - உறுப்பினர்களின் கடமைகள், பொறுப்புகள், நடத்தப்பட வேண்டிய கூட்டங்கள், போன்றன பற்றிய பல்வேறு விடயங்களை கொண்டதாக இப்பயிற்சிநெறி நடைபெறுகிறது.
மேலும், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியவசிய சேவைகள், பொது மக்கள் நலன்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கொண்டிருக்க வேண்டிய முக்கிய கடமைகள், பொறுப்புகள் தொடர்பிலும் இப்பயிற்சிநெறியில் விளக்கமளிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
6 hours ago