Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.கார்த்திகேசு / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அமைச்சர் தயாகமகேவின் ஏற்பாட்டில், மாபெரும் மருத்துவ முகாம் நாளை மறுநாள் (25) இடம்பெறவுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.
இந்த மருத்துவ முகாமினூடாக கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல், நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாட்காளிகள், ஊன்றுகோல்கள் வழங்குதல், பல் சம்மந்தமான சிகிச்சைகள், ஆயர்வேத மருத்துவ ஆலோசனைகள், உதவிகள், ஏனைய நோய்கள் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.
இம் மருத்துவ முகாமை சமூக நலன்புரி, ஆரம்ப கைத்தொழில் அமைச்சு, திருக்கோவில் பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன், இதில், அனைவரையும் கலந்து கொண்டு தங்களுக்கான மருத்துவ நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago