Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சமூக சேவைப்பிரிவு முன்னெடுத்த முதியோர்களுக்கான இலவச வைத்திய முகாம், தம்பட்டை மகா வித்தியாலயத்தில் நேற்று (07) நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரனின் வழிகாட்டலில், உதவிப் பிரதேச செயலாளர் கே.சதீஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச வைத்திய முகாம் செயற்பாடுகளை, பிரதேச செயலக சமூக அபிவிருத்திப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பர்மிலா தர்மரெத்தினம் வழிநடத்தினார்.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இடம்பெற்ற குறித்த வைத்திய முகாமில் திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன், பல் வைத்தியர் ரி.திர்சாந்தி, ஆயுள்வேத வைத்தியர் அப்துல் கையூம் உள்ளிட்ட பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு, வைத்தியப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இவ்வைத்திய முகாமில் அதிகளவான பொதுமக்கள் கலந்துகொண்டு, இரத்தப் பரிசோதனை, தொற்றுநோய், தொற்றாநோய்களுக்கான பரிசோதனைகள், பல் வைத்தியம், ஆயுள்வேத சிகிச்சைகள் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
42 minute ago
52 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
55 minute ago