2025 மே 02, வெள்ளிக்கிழமை

இளைஞனின் மரணத்துக்கு காரணமான மேலும் ஐவர் கைது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், வா.கிருஸ்ணா

முன்விரோதம் காரணமாக இளைஞரை வாளால் வெட்டி மரணமடையச் செய்து தலைமறைவாகி இருந்த மேலும் ஐந்து சந்தேகநபர்கள், இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இம்மாதம் 26ஆம் திகதியன்று மாலை 6 மணியளவில் வீதியில் நின்ற இளைஞனை, மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர், முன்விரோதம் காரணமாக வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கிப் படுகாயமடையச் செய்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  கணேசமூர்த்தி ரஜிதரன் (வயது 30) எனும் இளைஞன், சிகிச்சை பலனளிக்காமையால் நேற்று (29) மரணமடைந்தார்.

தலைமறைவாகி இருந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி நௌபரின்  வழிகாட்டலில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, ஏற்கெனவே கைதாகிய சந்தேகநபரொருவரின் தகவலுக்கமைய, தலைமறைவாகி இருந்த மேலும் 5 சந்தேக நபர்கள்  மத்திய முகாம் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பகுதியில் வைத்து, சம்மாந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X