எஸ்.கார்த்திகேசு / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டும் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக பிரதேச செயகலகத் துறைசார் அதிகாரிகளுக்குத் தெளிவூட்டப்பட்டுகின்றன.
இந்த ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல் கூட்டம், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ். தலைமையில், நேற்று (16) நடைபெற்றது.
இதன்போது, பொத்துவில் பிரதேசத்தில் கல்வி கற்று தொழில் வாய்ப்புகளை தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு, அவர்களின் துறைசார்ந்த ரீதியாக தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலான கருத்துத்தாடல்கள் இடம்பெற்றன.
இத்திட்டத்தின் நன்மைகள், முக்கியத்துவம், கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தல் தொடர்பான முக்கிய விடயங்கள் பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் துறைசாந்த உத்தியோகத்தர்களுக்கும் கிராம மட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டன.
15 minute ago
17 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
38 minute ago
1 hours ago