Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ், ரீ.கே.றஹ்மத்துல்லா
'கனவு காண்பதற்கல்ல, பாதை காட்டுவதற்காகவே' எனும் கருப்பொருளில் மூவின இளைஞர் கழகங்களை சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் கலந்துகொண்ட மாவட்ட பிரதேச இளைஞர் முகாம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலையுடன் முடிவுற்றது.
இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த இளைஞர் முகாம் நடைபெற்றது.
இதன்போது, இளைஞர்களுக்கு இசைக்கருவின் இன்பமும் அதனை அனுபவித்தலும், சூழல் பற்றியரசனையும் அதனை அனுபவித்தலும், இலங்கை இளைஞர் நடவடிக்கை பற்றிய சரித்திரமும் இளைஞர் கழக நடவடிக்கைகளும், தலைமைத்துவத்தின் பண்புகளும் குழுக்களை அமைத்தலும், பல நுண்ணறிவு விடயங்களை அறிதல், தீப்பாசறைக்கான ஆயத்தம், தீப்பாசறை, கண் விழித்தலம் ஆயத்தம் செய்தலும், ஆளுமை விருத்தியும் திறமையை எவ்வாறு வெற்றி கொள்வதும், இளைஞர் கழக முன்னேற்பாட்டு அறிக்கை தயாரித்தலும் இளைஞர் நாடாளுமன்றம் பற்றிய அறிவூட்டல், நேர்முகப் பரீட்சை மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு எவ்வாறு ஆயத்தம் செய்தல், சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுதலும் சமூகப்பண்பாடும், நிஸ்கோ கூட்டுறவு மற்றும் இளைஞர் சுகாதார வேலைத்திட்டத்தை எவ்வாறு மேற்கொள்ளுதல், இளைஞர்களின் வேலைத்திட்டங்கள் பற்றிய ஆய்வுகள் போன்ற தலைப்புக்கள் தொடர்பாக திறமையானவர்களினால் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யூ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ்.எம்.சிஸ்ரக்குமார் பிரதம அதிதியாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நுவரெலியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.வீ.ஜெயவீரே, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான ஏ.உமர்லெவ்வை, கமல்நிஸாந்த,கங்கா சாரிக்கா தமேயந்தி, இளைஞர் சேவை அதிகாரிகளான எம்.ஐ.எம்.பரீட், கே.சுந்தரலிங்கம், எம்.ஜே.எம்.ஹாறுன், ஏ.நஸீர்அலி,அட்டாளைச்சேனை பிரதேச சம்மேளனத் தலைவர் யூ.எல்.சபீர் உட்பட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
25 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago