Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.கார்த்திகேசு / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனைக்கு அமைவாக, “உங்களுக்கு ஒரு வீடு, நாட்டுக்கு நாளை” எனும் திட்டத்தின் ஊடாக, திருக்கோவில் பிரதேசத்தில் வீடற்ற வறிய குடும்பமொன்றுக்கான புதிய வீட்டுக்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, தம்பிலுவில் 01 கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திருக்கோவில் பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர் வி.திவாகரன் தலைமையில் இன்று (13) நடைபெற்றது.
வீடற்ற குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்கும் அரசின் திட்டத்தின் ஊடாக, தம்பிலுவில் 01 கிழக்கு வில்லியம்பிள்ளை வீதியில் வீடற்ற நிலையில், தற்காலிக கொட்டகையில் வாழ்ந்த வந்த குடும்பத்துக்கு நிரந்தர வீட்டை அமைத்தக் கொடும் வகையில், திருக்கோவில் பிரதேசத்தில் முதலாவது புதிய வீட்டுக்கான அடிக்கல் இன்று நடப்பட்டு, வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், திருக்கோவில் பிரதேச சபையின் உதவி தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளருமான எஸ்.விக்கினேஸ்வரன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக முகாமையாளர் ஏ.எம்.இப்றாய்ம், திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதீசேகரன், திவிநெகும உத்தியோகத்தரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியன் மாவட்ட அமைப்பாளருமான எஸ்பி.சீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், திருக்கோவில் பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பரிமலவாணி சில்வெஸ்டர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொத்துவில் பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.வி.நிலாம், கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி கீர்த்திகா மலர்ப்பிரியன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தர்சனா ரவீக்குமார் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.
40 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
53 minute ago