2025 மே 05, திங்கட்கிழமை

உச்சத்தைத் தொட்ட கொரோனா எண்ணிக்கை

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி.சகாதேவராஜா

அம்பாறை மாவட்டத்தில் நேற்றைய தினம்(09) கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  277 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவே இம்மாவட்டத்தில் ஒரே நாளில் பதிவான அதிஉயர் எண்ணிக்கையாகும்.

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தினுள்வரும் அம்பாறை பிராந்தியத்தில் 171பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 106 பேரும் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். கூடவே கல்முனைப்பிராந்தியத்தில் இருமரணங்களும் சம்பவித்திருக்கின்றன.

இதுவரைகாலமும் ஒரேநாளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியது இல்லை. எனவே தற்போது  நிலைமை மோசமாகிறது என கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் கண.சுகுணன் தெரிவித்தார்.

மேலும் இந்நிலைக்கு மக்களின்  கவனயீனமும், அலட்சியப்  போக்குமே காரணம் என்றும் வருத்தம் தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X