Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 ஜூன் 20 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வியாழக்கிழமை (20) முதல் சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்ககழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்து கடந்த 50 நாட்களாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைப்பு, மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்காமை, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமலுள்ள சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்ய வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளல், பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை சீராக்குதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தும் இது வரை தீர்த்து வைக்கப்படவில்லை யெனவும் நீண்ட காலமாக இருந்து வரும் எமது கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட தரப்பினர்களால் தீர்வு வழங்கப்படாமையினால் இதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.ஹனீபா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
36 minute ago
44 minute ago
56 minute ago