2025 மே 05, திங்கட்கிழமை

‘உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்ட விவசாயிகளிடமிருந்து, அரச உத்தரவாத விலைக்கு பெரும்போக நெல் கொள்வனவு செய்யப்படுமென, நெல் சந்தைப்படுத்தும் சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் நிமல் ஏக்கநாயக்க உறுதியளித்துள்ளாரென, ஸ்ரீ லங்கா விவசாய அமைப்பின் செயலாளர் ஏ.எல்.எம்.என். அஹமட் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நெல் அறுவடை ஆரம்பமாகவுள்ளதால், உத்தரவாத விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்யுமாறு, அம்பாறை நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளருடன் நேற்று (21) கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, அக்கரைப்பற்று, தம்பட்டை, சாகாமம், அட்டாளைச்சேனை ஆகிய களஞ்சிய சாலைகளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி பைவ ரீதியாகத் திறந்து, விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, விவசாயிகள் தமது நெல்லின் ஈரத் தன்மையைப் பதப்படுத்த களஞ்சியசாலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், கூடிய விலையில் தங்கள் நெல்லை விற்பனை செய்ய முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X