2025 மே 15, வியாழக்கிழமை

உத்தியோகத்தரால் பெண்ணுக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் ஒருவர், சாய்ந்தமருதைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு, அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக, கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பெண்ணின் மூத்த புதல்வரான இளைஞர், இம்முறைப்பாட்டை செய்துள்ளார்.

என்னுடைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக, எனது தாயிடம் உத்தியோகத்தர் கடுமையாகக்  கண்டித்திருப்பதுடன், அச்சுறுத்தும் வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார் என்று அந்த முறைப்பாட்டில் இனைஞன் தெரிவித்துள்ளார்.

இந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பை, அலுவலக கடமை நேரத்தில் மேற்கொண்டுள்ளதாகவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேசத்தில் அரசியல் செயற்பாடுகள் சூடுபிடித்து வருகின்ற நிலையில், குறித்த உத்தியோகத்தர் ஒரு கட்சிக்காகவும் இளைஞர் மற்றொரு கட்சிக்காகவும் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .