Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த வழக்கு, கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், இரு வேறு சந்தர்ப்பங்களில் இன்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேற்படி விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள் அனைவரும், பல்வேறு சந்தர்ப்பங்களில், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத் தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல மாதங்களுகக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான பிணை கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேகநபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இவ்வழக்கு விசாரணை , இம்மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
49 minute ago
1 hours ago