Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 27 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையில், எந்தவொரு பொது நிகழ்வுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம், உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைகளுக்கே இருப்பதாக, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் எந்த பொது நிகழ்வு நடத்துவதாயினும், சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கும் கருத்து முற்றிலும் தவறானது என்றும் இது மக்களைக் குழப்புகின்ற நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது விடயமாக அவர், இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
“தனிமைப்படுத்தல், நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டம், சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட 2168/6ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி என்பனவற்றின் ஏற்பாடுகளுக்கிணங்க, உள்ளூராட்சி மன்றங்களின் ஆள்புல எல்லைக்குள் கொவிட்19 நோய்த் தொற்று தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு, நடைமுறைப்படுத்தும் தகுதிவாய்ந்த அதிகாரியாக குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
“இதன்படி, ஓர் உள்ளூராட்சி மன்ற எல்லைக்குள் கொவிட்19 நோய்த் தொற்றுத் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சம்மந்தமாக தீர்மானங்களை மேற்கொண்டு, அமுல்படுத்துகின்ற அதிகாரம் குறித்த உள்ளூராட்சி மன்றத்தின் தலைமைக்கே பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது.
“கல்முனை மாநகர சபையை பொறுத்தளவில், பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டதையடுத்து, அன்றைய தினமே தனியார் கல்வி நிலையங்களையும் மூடுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்தது.
“அடுத்த சில தினங்களில் மக்கள் கூடுகின்ற சந்தைகள், மைதானங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களையும் மூடினோம். அவ்வாறே திருமணங்கள், கூட்டங்கள் உட்பட பொது நிகழ்வுகளுக்காக மண்டபங்கள் வழங்கப்படுவதையும் தடை செய்தோம். இந்தத் தடை இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை” என்று கல்முனை மாநகர மேயர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago