Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலையற்ற பட்டதாரிகளுக்கு மூன்றாம் கட்ட நியமனம் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹருப், உள்வாரி, வெளிவாரி என்ற பாகுபாடில்லாமல் பட்டம் முடித்த ஆண்டின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரானின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.இம்மாத முற்பகுதியில் பட்டதாரிகள் 16,800 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நியமனங்களின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் உள்வாரிபட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மூன்றாம் கட்ட நியமங்களில் உள்வாரி, வெளிவாரி என்ற பாகுபாடில்லாமல் பட்டம் முடித்த ஆண்டின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சி தனி அரசாங்கம் அமைத்த பின்னரே எம்மால் இவ்வாறான நியமனங்கள் வழங்க முடிகின்றது. பிரதமர்ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனங்களை 2016 ஆம் ஆண்டே வழங்க முயற்சி செய்தார். ஆனால் அப்போது தேசிய அரசாங்கத்தில் காணப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஏற்படுத்திய தடையால் இதற்கான அமைச்சரவை அனுமதியை பெற முடியாமல் போனது என தெரிவித்தார்.
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago