2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உள்ளூர் துப்பாக்கி வெடிப்பு: மூன்றாவது சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் வம்மியடி காட்டுப் பகுதியில் கடந்த மூன்றாம் திகதி உள்ளூர்த் துப்பாக்கியொன்று வெடித்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது சந்தேக நபரை புதன்கிழமை (11) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த இரண்டாம் திகதி இரவு வேட்டையாடுவதற்காக மேற்படி காட்டுப் பகுதிக்கு நான்கு பேர் உள்ளூர்த் துப்பாக்கியுடன் சென்றனர்.  இதன்போது, குறித்த துப்பாக்கி வெடித்ததில் விநாயகபுரம், சின்னத்தோட்டத்தைச் சேர்ந்த சிவகுரு உதயகுமார் (வயது 35) என்பவர் பலியாகினார்.

இதனை அடுத்து, ஏனைய மூன்று பேரில்  36, 41 வயதுகளையுடைய இரண்டு பேரை அன்றையதினம் பொலிஸார் கைதுசெய்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது, இவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவிடப்பட்டது.  

இந்நிலையில், மூன்றாவது சந்தேக நபர் (வயது 24) இதுவரை காலமும் தலைமறைவாகி இருந்துவந்த நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X