Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத் தகவல் திணைக்கள அம்பாறை மாவட்ட ஊடகப்பிரிவு அலுவலகத் திறப்பு விழாவும் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வும், அம்பாறை மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தலைமையில் நாளை (06) நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ, திணைக்களத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
உள்ளூர் ஊடகவியலாளர்களின் கடமைகள், பொறுப்புகள், புதிய ஊடகம் தொடர்பாகவும், தேசிய ஊடகங்களில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்கு தொடர்பிலும், இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளன.
அலுவலகத்திறப்பு விழா மற்றும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில், அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மாவட்டத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிப்பார். அதனையடுத்து அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவௌ உரையாற்றவுள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படடுள்ள ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவௌ கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
25 minute ago
36 minute ago