2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்களைத் தாக்குவது கண்டிக்கத்தக்க விடயம்

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களின் பணிகளையும் அவர்களின் ஊடக சுதந்திரத்தையும் அடக்கும் நோக்கில், சில அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் தாக்குவதும், கண்டிக்கத்தக்கச் செயலாகுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் பீ.எச்.பியசேன தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையடுத்து ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரால் அண்மையில் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்றவுடன், குறித்த ஊடகவியலாளரின் வீடு தேடிவந்து தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் போதே, பீ.எச்.பியசேன  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“இந்தத் தாக்குதல் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கதும், கவலைக்குரியதுமாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறு ஊடகவியலாளர் மீதான தாக்குதல் என்பது ஜனாநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் விடுக்கப்படுகின்ற ஒரு சவாலாகவே நான் கருதுகின்றேன்.

“ஊடகவியலாளர்களினால் வெளியிடப்படுகின்ற செய்திகளை நடுநிலை கொண்டு பார்க்க வேண்டுமே தவிற மாறாக அவர்களைத் தாக்க முயற்சிப்பதும், வீடு தேடிப்போய் தாக்குவதும், கொலை அச்சுறுத்தல் விடுப்பது போன்ற செயற்பாடுகள் மிக மோசமான சுயநல அரசியல் இலாபத்துக்காகவே அன்றி வேறு ஒன்றுமில்லை.

“மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் கௌரவமானவர்கள்.

சமூக விடயங்களிலும், அரசியல் கட்சி வேறுபாடுகள் இல்லாமலும், இன மத வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரினதும் செய்திகளை மிகவும் ஆர்வம் கொண்டு வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்களின் பணியை முன்னெடுத்துச் செல்ல அவர்களுக்கு பக்க பலமாக நின்று உதவக்கூடிய அரசியல்வாதிகளாக நாம் இருக்கவேண்டும்.

“அதைவிடுத்து, அவர்களை அச்சுறுத்தித் தாக்குகின்ற அரசியல்வாதிகளாக நாம் ஒருபோதும் இருக்க முனையக்கூடாது என கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X