2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஊழியர்களுக்கு கொரோனா; தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனையிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றும் 05 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு, பொதுச் சுகாதாரப் பரிசோதர்களால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போதே, ஐவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

இதையடுத்தே, இவ்வைத்தியசாலையை, இம்மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 14 நாள்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தொற்றுக்குள்ளான ஊழியர்கள் இங்கேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் ஐவரும் பெண் ஊழியர்கள் எனவும் பொத்துவில், காரைதீவு, பாண்டிருப்பு, நாவிதன்வெளி மற்றும் பழுகாமம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களது குடுமபத்தினர் மற்றும் இவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .