Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஜூன் 16 , பி.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பாடசாலை காலங்களில் மாணவர்கள் வழமையாக சொல்கின்ற பொய்களை சொல்லி இருக்கலாம், ஆனால் இனம் சார்ந்து, சமூகம் சார்ந்து எந்த ஒரு பொய்யையும் நான் சொன்னதில்லை. சொல்லப்போவதும் இல்லை, என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் நேற்றிரவு (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கொரோனா காலத்தில் மக்களின் பசியை போக்குவதற்கு கூட இயலாமல் இருக்கு, நீங்களா வடகிழக்கினை குட்டி சிங்கப்பூராக மாற்றப்போகின்றீர்கள்.
தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது, “கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன்” என சொன்னானாம். என்கின்ற மாதிரி, தயவு செய்து எமது மக்களை ஏமாற்றாதீர்கள்.
தேர்தல் காலத்தில் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு மாயையை காட்டி வாக்குகளை சூறையாடிவிட்டு வடக்கு, கிழக்கினை விட்டு போனவர்கள் இன்னும் வரவில்லை.
இவர்கள் இனி அடுத்த தேர்தலுக்கு தான் வருவார்கள், மக்களும் இதனை உணர வேண்டும் என குறிப்பிட்டார்.
M
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago