Freelancer / 2026 மே 06 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜாஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த வீதி விபத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று நிகழ்ந்த வீதி விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக ‘மாரீசன்’ படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தமிழில் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது.
ஆர்.பி.சவுத்ரியின் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் நடிகர்களாக சினிமா படங்களில் நடித்து வருகின்றனர். (a)
56 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
8 hours ago