2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்ட பயிர்செய்கைத் திட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன்  ஹரன்

ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகேயின் ஏற்பாட்டில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஆலோசனைக்கு அமைய அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் 300 பயிர் செய்கை குடும்பங்களுக்கான உள்நாட்டு ரீதியான நுகர்ச்சி பயிற்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெயாகரின் ஏற்பாட்டில் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிறிய வெங்காயம், வெள்ளை எள்ளு, பிஞ்சு மிளகாய் போன்றவற்றை உற்பத்தி செய்தல், பராமரிப்பு முறைகள், உள்நாட்டு வெளிநாட்டு  சந்தைவாய்ப்பு  தொடர்பில் பிரதேச உற்பத்தியாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்.

இப் பயிற்சி நெறியில் ஆலையடிவேம்பு பிரதேச திவினெகும முகாமைத்துவப் பணிப்பாளர் நேசராஜா, அமைச்சரின் இணைப்பாளர் வினோகாந், பிரதேச சபை செயலாளர் திருமதி. கமலநாதன் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X