Freelancer / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
சுமார் 5 கிலோகிராமுக்கும் மேலதிகமான கஞ்சாவை மிகவும் சூட்சுமமாக கடத்தி சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்தே 51 வயதுடைய குறித்த சந்தேகநபர், நேற்றிரவு (27) 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று இராணுவ முகாம் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய, மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் சந்தேகநபர் கைதானார்.
சந்தேகநபர் வசம் இருந்து சுமார் 5 கிலோகிராமுக்கும் மேலதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (N)
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025