Janu / 2024 செப்டெம்பர் 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் விசேட தேர்ச்சி பெற்ற புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் விநியோகம் செய்து வந்த சந்தேக நபர் சாய்ந்தமருது பிரதான வீதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (3) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வி திணைக்களத்தில் பணிபுரிந்து வரும் 43 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்தள்ளது.
குறித்த சந்தேக நபர் 4 அரை இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கடத்தி வரப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளுடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago