2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒரு மாத அவகாசம் கோரினார் ஞானசார தேரர்

எஸ்.சபேசன்   / 2019 ஜூன் 22 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தருவதற்கு, தனக்கு ஒருமாத காலம் அவகாசம் வழங்குமாறு, பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து, அவர்களின் கோரிக்கைக்கு தீர்வுகாணும் முகமாக, பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போ​தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

தன்னால் 5 நாள்களில் கல்முனையை தரமுயர்த்தித் தர முடியாது என்றும் ஆனால், விளைவுகள் தற்​போது மோசமாக இருப்பதால், நிதானமான நடவடிக்கைகளை முன்னெடுப்பறதற்கு, தனக்கு ஒரு மாதகால அவகாசம் தருமாறும் அதற்குள் கல்முனையை தரமுயர்த்தித் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .