Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 01 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு பிரதேசத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி கிராமத்தில் நேற்று (31) மாலை மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையின்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவிக்கையில்,
“எமது காரியாலயத்தில் வியாபாரிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கு முகமாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் மாவடிப்பள்ளி வியாபாரி ஒருவருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டிருந்தது.
“அவரது குடும்பத்தை மையமாக வைத்து நேற்று 102 பேருக்கு அன்டிஜன் சோதனை செய்யப்பட்டது. இதில் வியாபாரியின் குடும்பத்தில் அவரது மனைவி, 3 பெண் பிள்ளைகள், 2 ஆண் பிள்ளைகள் உள்ளிட்ட 7 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
“இவ்வியாபாரியின் குடும்பத்தினர் அடங்கலாக 4 குடும்பங்களில் 14 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
“அவர்களில் ஆண்களை பாலமுனை வைத்தியசாலைக்கும் பெண்களை மருதமுனை வைத்தியசாலைக்கும் அனுப்பிவைத்துள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago