2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஒலிப்பெருக்கி மூலமான நடமாடும் வர்த்தகத்துக்குத் தடை

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று மாநகரசபை எல்லைக்குள், ஒலிப்பெருக்கி மூலம் நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், ஒலிப்பெருக்கியை தடை செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கரைப்பற்று மாநகரசபை பிரதேசங்களில், ஒலிப்பெருக்கியைப் பாவித்து நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களால், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக, மாநகர ஆணையாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைவாகவே, இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளைத் தடை செய்யுமாறும் தவறும் பட்சத்தில் வர்த்தகர்களுக்கு எதிராக மாநகர சபை கட்டளைச் சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தங்களின் உடமைகளும் பறிமுதல் செய்யப்படுமென, அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .