Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
ஒலுவில் கடலரிப்புப் பிரச்சினைக்கு உடன் முற்றுப்புள்ளி வைப்பதற்காக, அமைச்சரவையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமென, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸால் காசிமிடம் உறுதியளித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் பிரதியமைச்சர் பைஸால், அநுர திஸாநாயக்கவை, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் சந்தித்து உரையாடினார்.
ஒலுவில் கடலரிப்பால் இதுவரை ஏற்பட்டிருக்கும் சேதங்கள் பற்றியும் எதிர்காலத்தில் மேலும் ஏற்படவுள்ள ஆபத்துப் பற்றியும், செயலாளர் அநுரவிடம், பிரதியமைச்சர் பைஸால் காசிம் விளக்கிக் கூறினார். இது தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் அனைத்தையும், செயலாளரிடம் ஒப்படைத்தார்.
குறிப்பாக, இந்தக் கடலரிப்புக்குக் காரணமான ஒலுவில் வர்த்தகத் துறைமுகத்தால் இந்த நாட்டுக்கு நன்மைகள் எவையும் ஏற்படப் போவதில்லை என்றும், அதை முற்றாக அகற்றுவதன் மூலமே கடலரிப்புப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை முன்வைக்க முடியுமென்றும், பிரதியமைச்சர் எடுத்துக் கூறினார்.
பிரதியமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அநுர திஸாநாயக்க, முதலில் மண்ணை அகழ்வதற்காக மண் அகழ்வு இயந்திரம் ஒன்றை அவசரமாக இறக்குமதி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெறுவதற்காக, உடனடியாக அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026