2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒலுவில் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கமும் நிவாரணப் பணியில்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஊரடங்குச்சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்காகவும் மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அதன் அங்கத்தவர்களால், 16 இலட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு, நிவாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்;கத்தின் செயலாளர் கலாநிதி கே.எம். முபாறக், இன்று (15) தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து, தேசிய மட்டத்திலான உதவிப் பணிகளை தொடருகின்ற அதேவேளை, அம்பாறை மாவட்டத்துக்கு உட்பட்ட அரச வைத்தியசாலைகளை அடிப்படையாக வைத்து உதவிகளையும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கும், குறித்த நிதியின் ஒரு பகுதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தொவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .