Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா, ஐ.ஏ.ஸிறாஜ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று சனிக்கிழமை (12) ஒலுவிலுக்கு விஜயம் செய்து கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டார்.
கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு மற்றும் தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத்தருவதாகவும் கடலரிப்பை தடுப்பதற்கு கருங்கல்லிளான தடுப்புச் சுவர் நிர்மாணிப்பது தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி அதற்கான தீர்வினை மிகவிரைவில் பெற்றுத்தருவதாகவும் கூறினார்.
இதேவேளை, கடலரிப்பினால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மீனவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு தொழில் வழங்குமாறும், அழிந்து போன மீனவ வாடிகளை நிர்மாணித்துத்தருமாறும் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலரிப்பினால் சுமார் 500ற்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பாதிக்க்பட்டுள்ளதோடு 15 ஏக்கருக்கும் மேற்பட்ட தென்னந்தோட்டங்களும் சேதமடைந்துள்ளன.
அத்துடன், துறைமுகத்துக்குகாக காணிகளை இழந்தவருக்கு இதுவரையில் நஷ்டஈடு வழங்கப்படாவர்களுக்கு நஷ்டஈட்டை பெற்றுத்தருமாரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒலுவில் துறைமுக கட்டுமானப் பணிகளின் பின்னர் கடற்கரையை அன்டிய பிரதேசம் நாளாந்தம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருவதுடன் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும், நிலங்களும் காவு கொள்ளப்படுகின்றது இதனால் அப்பிரதேச வாழும் ஆழ்கடல், கரைவலை மற்றும் நன்னீர் மீனவர்களின் தொழில்களும் பாதிக்கப்படுள்ளதுடன் கடற்கரையை அன்டிய துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கட்டிடங்களும் சேதமடையும் நிலை காணப்படுகின்றது.
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago