2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஒலுவில் வைத்தியசாலையின் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையின் ஆண் நோயாளர் விடுதி நிர்மாணப் பணிக்காக சுகாதார சுதேச வைத்தியத்துறையின் பிரதியமைச்சர் பைஷால் காசீம் முதற்கட்டமாக ஒரு கோடி 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையில் நிரந்தரமான ஆண், பெண் நோயாளர் விடுதிகள் இல்லாமையினால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

50 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விடுதியின் நிர்மாணப்பணியை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு மேலதிக நிதி தேவைப்படுவதால், இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .