Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
றாசிக் நபாயிஸ்
அட்டளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பான “ஓல்அன்ஸ் 93” சமூக அபிவிருத்தி நண்பர்கள் கூட்டமைப்பின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும், அட்டளைச்சேனை தேசிய பாடசாலையில் நேற்று (24) நடைபெற்றது.
நிர்வாகத் தெரிவின் போது, தலைவராக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், உபதலைவராக எஸ்.அம்ஜத், செயலாளராக எம்.ஐ.இக்பால், பொருளாளராக எம்.எம்.அறபாத், இணைச் செயலாளராக ஏ.எஸ்.குமைஸ், அமைப்பாளராக யு.எல்.றபாயிடீன், கணக்காய்வாளராக எம்.ஜி.றெஸான் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், அங்கத்தவர்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
இதன்போது, அம்பாறை மாவட்டத்தில் சகலதுறை சார்ந்த விடயங்களிலும் தங்களின் சமூக அபிவிருத்தி சார்ந்த விடயங்களை மேற்கொள்வதுடன், இன, மத பேதமற்ற முறையிலும் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அமைப்பின் புதிய தலைவர், தனது உரையில் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago