2025 மே 15, வியாழக்கிழமை

கஞ்சா விநியோகித்த பெண் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கஞ்சாவை சூட்சுமமாக மறைத்து விற்பனை செய்து வந்த 47 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் உட்பட நால்வரை,  நேற்று (29) மாலை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை -   நிந்தவூர் பிரதேசத்தில்  போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர்  நடமாடுவதாக சம்மாந்துறை இரகசியப்  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான பெண்ணுக்கு, நீதிமன்றத்தில் ஏற்கெனவே 4 வழக்குகள் உள்ளதாகவும் நிந்தவூர் பகுதியில் கஞ்சாவை விநியோகம் செய்யும் “கொட்டாள்” என்று அழைக்கப்படும்  முக்கிய நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2014 ஆண்டிலிருந்து இந்தச் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தப் பெண்ணிடம் கஞ்சாவை வாங்கியவர்கள் என்ற சந்தேகத்தில் 3 பேரும் சம்மாந்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .