2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் நடமாடியவர் கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறை பிரதான வீதியில், 5300 மில்லிகிராம் கஞ்சாவுடன் வீதியியில் நடமாடிக்கொண்டிருந்த 30 வயது குடும்பஸ்தரை, இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கைது செய்ததாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா வியாபாரம் செய்யும் குறித்த சந்தேக நபர் குறித்து, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X