2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ஒலுமுதீன் கியாஸ், எஸ்.ஜமால்டீன்

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் உட்பட 03 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்கு கஞ்சா கொண்டுசென்ற குற்றச்சாட்டில் ஒருவரை நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறிருக்க, கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் சனிக்கிழமை (24) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அட்டாளைச்சேனையிலுள்ள சந்தேக நபரொருவரின் வீட்டைச் சோதனையிட்டபோது, ஒரு கிலோ 80 கிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது.

மேலும், அக்கரைப்பற்று நீத்தை வயல் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (23) மற்றைய சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, சந்தேக நபர் 105 கிராம் கஞ்சாவை மோட்டார் சைக்கிளுடன் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இவ்வாறு தப்பிச்சென்ற சந்தேக நபரை அக்கரைப்பற்றிலுள்ள அவரது வீட்டில் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .