Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 16 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் கடைமையை செய்யவிடாது அவர்களுக்கு இடையூறு விளைவித்த குற்றசாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ். றஸாக், இன்று (16) திங்கட்கிழமை விடுதலை செய்துள்ளார்.
கடந்த 09ஆம் திகதி திங்கட்கிழமை மாலை விபத்தொன்றில் காயமடைந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கும்போது வெளியில் நின்ற சிலர் வைத்தியர்களுக்கும் மருத்துவ தாதி உத்தியோகத்தர்களுக்கும் கடமையை செய்யவிடாது பங்கம் ஏற்படுத்தினார்கள். இதனால் வைத்தியர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (11) முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்மந்தப்பட்வர்களை உடன் கைது செய்யுமாறும், கடமைக்கு பங்கம் விளைவித்ததைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை (13) வைத்தியர்களும், உத்தியோகத்தர்களும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் வைத்தியசாலை நிருவாகத்தினருக்கும் மற்றும் பொலிஸார், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கிமிடையிலான சமரச பேச்சுவார்த்தை இடம்பெற்று அடையாள வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துரித விசாரணையின் போது இச்சம்பவத்தடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட மூவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார், இன்று திங்கட்கிழமை கைது செய்தனர்.
சந்தேக நபர்களை, பொத்துவில் நீதவான் நீதின்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில், இன்று (16) ஆஜர்செய்த போது ஒவ்வொருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்து இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
2 hours ago