Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம்.அப்ராஸ்
கல்முனை மண்ணின் வரலாறுகளை, அதன் தொன்மைகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் அங்கமாக கல்முனை (முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்) , கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா நிருவாகத்தின் ஏற்பாட்டில் கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம் இணைந்து வரலாற்றுச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் தொடர்பான அறிமுகம் கொண்ட நினைவுப் படிகம் திரை நீக்கம் செய்யும் நிகழ்வு நேற்றுமுன்தினம் பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றது
மெளலவி பி. எம்.ஏ.ஜலீல் தலைமையில் நிகழ்ந்த வைபவத்தில் கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் , உலமாக்கள் , மரபுரிமை ஆய்வு வட்ட உறுப்பினர்கள் புத்திஜீவிகள்,நலன்விரும்பிக்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் கல்முனை மாநகரில் பழமை வாய்ந்த வரலாறு கொண்ட புராதனம் மிக்கதாய் இக் கடற்கரைப் பள்ளிவாசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago