எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

“நகரத்தைச் சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்போம்” எனும் தொனிப்பொருளில், பொத்துவில் 23ஆவது இராணுவக் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.எம்.எம்.பி.கே. மதகெதர தலைமையில், பொத்துவில் கடற்கரைப் பிரதேசம் இன்று (29) சுத்தம் செய்யப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 242ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் கொமாண்டர் கேனல் ரீ.சி. பீரிஸின் ஆலோசனைக்கமைய, பொத்துவில், அறுகம்பே கடற்கரை பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
இராணுவத்தினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் இணைந்துகொண்டு, துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
டெங்குத் தொற்றால் ஏற்படக் கூடிய தாக்கம் தொடர்பாகவும், டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை எவ்வாறு அழித்தொழிக்க வேண்டுமெனவும், பொத்துவில் 23ஆவது இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஏ.எம்.எம்.பி.கே. மதகெதரவால் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வூட்டப்பட்டது.
52 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
4 hours ago