2025 மே 08, வியாழக்கிழமை

கடற்கரை சுத்திகரிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்   

 

கடற்கரை பிரதேசங்களை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதுடன், அப்பிரதேசங்களை சுற்றுலாத்துறைக்கு ஏற்றது போல் அழகுபடுத்தும் சிரமதானப் பணி, இராணுவத்தினரின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரப் பிரதேசத்தில், இன்று (2) இடம்பெற்றது.

அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரி கேணல் ஜானக விமலரட்ண தலைமையில் நடைபெற்ற சிரமதானப் பணியில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன்,  இராணுவ பொதுமக்கள் தொடர்பு அதிகாரி மேஜர் சந்திம ஜெயசேன, மேஜர் அனுர புண்ணியசிறி, எச்.என்.பி.அசுரன்ஸ், வலய முகாமையாளர் பி.ஏ.சஜீவ், கரையோரம்பேணல் மற்றும் கரையோர மூலவளத் திணைக்களத்தின் பொறியியலாளர் கே.எம்.றிபாஸ், கரையோரம்பேணல் உத்தியோகத்தர் கே.எஸ்.பாபுஜி, ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  இராணுவத்தினர், சமுர்த்தி பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆலையடிவேம்பு நாகதம்பிரான் கோவிலுக்கு முன்பாகவிருந்து ஒரு குழுவினரும்  சின்னமுகத்துவாரப் பாலத்துக்கு முன்பாக இருந்து ஒரு குழுவினரும் சிரமதானப் பணியில் இணைந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X