2025 மே 15, வியாழக்கிழமை

கடலரிப்பின் அச்சத்தால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தியதன் பின்னரே, துறைமுகப் படகு நுழைவாயிலில் மூடியுள்ள மணலை அகற்ற வேண்டுமெனத் தெரிவித்து, ஒலுவில் பிரதேச மக்கள், துறைமுக பிரதான நுழைவாயில் முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று (03) காலை மேற்கொண்டனர்.

ஒலுவில் பிரதேச மக்களுடன், அப்பிரதேச ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இணைந்து, இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தது.

குறித்த துறைமுக நிர்மாணப் பணியால், ஒலுவில் பிரதேச மக்கள் பல்வேறுபட்ட இழப்புகளையும் துன்பங்களையும் அனுபவித்து வருவதாகவும், நிர்மாணப் பணியின் போது உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம், நிரந்தக் கடலரிப்புத் தடுப்புச் சுவர் அமைப்பது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு விடயம் போன்ற எதனையும் மேற்கொள்ளவில்லையென, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இங்கு குவிந்துள்ள அதிகளவிலான மணலை வெளியேற்றுவதன் பிரதிபலிப்பாக, கடற்கரையின் ஏனைய பகுதிகளில் பாரிய கடலரிப்பு ஏற்படுமென, பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .