2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘கடலரிப்பை தடுப்பதற்கு கருங்கல்களால் தடுப்பு சுவர்’

Editorial   / 2020 மே 21 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

 அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல்களிலான தடுப்புச் சுவர் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.

தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் திருக்கோவில், நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு கடல் ஓரம் பேணல், கடல் மூல வள முகாமைத்துவ திணைக்களத்தால் நிரந்தரமாக கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல்லிலான தடுப்புச் சுவர் நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

தற்போது உடனடியாக தடுப்புச் சுவர் நிர்மாணிக்க முடியாமல் உள்ளதாகவும், கடல் கொந்தளிப்பு குறைந்து கடல் நீர் முன்னோக்கி வருவது குறைவாக வரும் பட்சத்தில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

கடலரிப்புக் கரணமாக, கரையோரப் பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொள்வதோடு, பொருளாதார ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .