2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கடலரிப்பை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 08 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரியும் கரையோர பிரதேசத்தை பாதுகாக்கக் கோரியும் இன்று அங்கு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேச பொது அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்ட பேரணி, திருக்கோவில் முருகன் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்து திருக்கோவில் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று நிறைவடைந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் 'எமது பிரதேசத்தில் தொடர்ந்து கடலரிப்பு இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில்  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகள் கருசணை காட்டாது இருந்து வருகின்றனர். இதனை உடனடியாக தடுக்குமாறு கோரி ஒரு கவணயீர்ப்பு செய்யும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு உள்ளோம் என தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X