2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘கட்சியின் வரலாற்றை திரிபுபடுத்துகின்றனர்’

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.என்.எம்.அப்ராஸ், நூருல் ஹுதா உமர், எம்.எம்.அஹமட் அனாம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தனக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் எம்.பி. நியமனங்களில் அதிகமானவற்றை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேதான் வழங்கியிருப்பதாகவும் இக்கட்சியின் வரலாற்றை, சிலர்  திட்டமிட்டுத் திரிபுபடுத்துகின்றனர் என்றும் கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் 19ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (16) நடைபெற்றன.

இதற்கமைய, கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஒழுங்கு செய்திருந்த நினைவுப் பேருரை, கட்சியின் கல்முனைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை வகித்து நினைவுப் பேருரை நிகழ்த்துகையிலேயே, தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமது கட்சியின் வரலாற்றை சில பத்தி எழுத்தாளர்கள் இருட்டடிப்புச் செய்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

கட்சியின் தோற்றம், வரலாறு, அதன் சமூகப் பணிகள் போன்றவை தொடர்பிலும் பிழையான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த சந்ததியினருக்கு உண்மையான வரலாறுகள் சென்றடைய வேண்டுமென்றால் தகவல்கள் திரிபுபடுத்தப்படாமல், உள்ளவாறு சொல்லப்பட வேண்டுமென்றார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பலர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தமது ஆய்வுக்காக எடுத்துக் கொள்கின்றனர் எனவும் அதற்காக கட்சி மட்டத்தில் உண்மையான தகவல்களைத் திரட்டி, நூலுருவாக்கம் செய்வதற்குப் பொறுப்புள்ளவர்கள் முன்வர வேண்டுமென, அவர் வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .