2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட வீதிகள், பொது இடங்களில் பிடிக்கப்படுகின்ற கட்டாக்காலி ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து தலா 3,000 ரூபாய் அபராதம் விதிப்பதென, கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு, நேற்று (23) மாலை, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது, மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ், கட்டாக்காலி கால்நடைகளுக்கு அபராதம் அறவிடப்படுவது தொடர்பிலான விடயம் ஆராயப்பட்டபோதே, மேற்படி தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த கால்நடைகள் பிடிபட்ட அன்றே அவற்றின் உரிமையாளர்களால் அபராதத் தொகை செலுத்தப்பட்டு, மீட்கப்படாமல் இருப்பின், பிந்திய நாள் ஒன்றுக்கு பராமரிப்புச் செலவாக 1,000 ரூபாய் வீதம் அறவிடுவது எனவும் கால்நடைகளைப் பிடிக்கும் பணியாளருக்கு தலா 500 ரூபாய் கொடுப்பனவு வழங்குவது என்றும், இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்வாறு பிடிபட்ட கால்நடைகள் ஒரு வருட காலத்தினுள் அவற்றின் உரிமையாளர்களால் மீட்கப்படா விட்டால், அவை ஏலத்தில் விற்கப்பட்டு, பராமரிப்புச் செலவு போக மீதித் தொகையை, மாநகர சபை நிதியத்தில் வைக்கப்பட வேண்டும் என்று, மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, மாநகர மேயர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X