2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வைக் காண்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கரும்பு விவசாய சங்க உறுப்பினர்கள் சந்திப்பு மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கரும்பு விவசாய சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.சம்ஸ்சுதீன் தெரிவித்தார்.

நீர்வழங்கல் அமைச்சின் நடமாடும் சேவை நேற்று(18) அம்பாறையில் நடைபெற்றது. இதன்போது கரும்பு விவசாயிகள் சங்கம், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்க நேற்று(18) பிற்பகல் வரவழைக்கப்பட்டு இதற்கான ஆலோசனைப் பெறப்பட்டபோதே ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய உணவு உற்பத்தி விவசாயிகள் மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இத்;தினத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் நேர ஒதுக்கீடு பெற்று கரும்பு விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இதன் போது உறுதியளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X