Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, பி.எம்.எம்.ஏ.காதர்
கிழக்கு மாகாணத்தின் மூத்த எழுத்தாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா, சுகவீனமுற்றிருந்த நிலையில், சாய்ந்தமருது, அஹமட் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (02) அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்
கல்முனை கலை, இலக்கிய பேரவையின் ஸ்தாபகத் தலைவரான இவர், சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் கவிஞராகவும் திகழ்ந்துள்ளார். தமிழ் மொழி இலக்கணம், இலக்கிய பாடங்களை கற்பிப்பத்தில் பாண்டித்தியம் பெற்ற ஓர் ஆசிரியராகவும் போற்றப்பட்ட இவர், பல இலக்கிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவரது கலை, இலக்கியப் பணிகளைப் பாராட்டி கடந்த காலங்களில் அரசாங்கத்தால் கலாபூசணம், சாகித்திய விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவரது ஜனாஸா, சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவாவின் மறைவுக்கு, மருதம் கலைக்கூடல் மன்றம் உள்ளிட்ட அமைப்புகளும் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்டோரும் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
4 minute ago
14 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
16 minute ago