2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கல்முனையின் முன்னாள் தவிசாளர் மறைவு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எஸ்.ஹமீத், இன்று (09) காலமானார்.

1994ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை பிரதேச சபைத் தேர்தலில் இவர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டி, உறுப்பினராக பதவி வகித்து வந்த நிலையில், 1998ஆம் ஆண்டு தவிசாளராக இருந்த ஐ.ஏ.ஹமீத் இராஜினாமாச் செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் அளப்பரிய சேவையாற்றிய இவரது மறைவு பேரிழப்பாகும் என்று, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அனுதாபம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X